ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட வங்கி கணக்கை வைத்திருக்கலாமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தற்போது புதிய விதிமுறையினை வெளியிட்டுள்ளது.
வங்கி கணக்கு விளக்கம் :
பொதுவாகவே குடிமக்கள் தங்களது வாழ்நாளில் ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கி கணக்கை பயன்படுத்திக்கின்றனர். அதாவது, பள்ளியில் படிக்கும் போது ஒரு கணக்கை பள்ளியின் தரப்பில் இருந்தே திறக்கின்றனர். இதன் பின்னர், மற்றோரு சேமிப்பு கணக்கு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தை டெபாசிட் செய்வதற்கு சம்பள கணக்கு என ஒருவரே எக்கச்சக்கமான கணக்குகளை வெவ்வேறு வங்கிகளில் திறக்கின்றனர்.
இந்நிலையில், ஒருவர் எத்தனை வங்கி கணக்கை துவங்கலாம் என்பது குறித்தும், ஒன்றிற்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் என்னாகும் என்பது குறித்தான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
மேலும், ஒரு வாடிக்கையாளர் எத்தனை கணக்குகளை துவங்கலாம் என்பதற்கான விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. அதாவது, வங்கியில் மொத்தமாக சேமிப்பு கணக்கு, நடப்புக் கணக்கு, சம்பள கணக்கு, கூட்டு கணக்கு ஆகிய கணக்குகளின் அடிப்படையில் அக்கௌன்ட்டை திறக்கலாம்.
அதாவது, சேமிப்பின் அடிப்படையில் கணக்கை திறக்க விரும்பினால் வட்டியுடன் கூடிய சேமிப்பு கணக்கு துவங்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கை திறந்து பயன்படுத்தாமல் வைத்திருக்காமல் தொடர்ந்து பயன்படுத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், புதிய வங்கி கணக்கை திறக்க நேரிட்டால் ஏற்கனவே வைத்திருக்கும் அக்கௌன்ட்டை மொத்தமாக மூடி விட்டு புதிய கணக்கை திறக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.